மாரிகாலம் சென்றதே

 

மாரிகாலம் சென்றதே மழையும் பெய்து ஓய்ந்ததே

புஸ்பங்கள் பூத்து நல்ல வாசம் வீசுதே

எந்தன் மணவாட்டியே ! எந்தன் மணவாட்டியே !

உந்தன் நேசர் சத்தம்  கேட்டு

நீ எழுந்து வா  இன்றே நீ எழுந்து வா !

 

 

கன்மலையின் வெடிப்பில் தங்கும் எந்தன் புறாவே

உந்தன் இன்ப சத்தம் நானும் இன்று கேட்க                 வேண்டுமே

உந்தன் முகரூபம் காண ஏங்கிடுதே எந்தனுள்ளம்

உத்தமியே நீ எழுந்து வா! வா! வா!

உந்தன் நேசரோடு உறவாட  வா! வா! வா!

 

பனியும் தூறலாலும் எந்;தன்  தலையும் நனையுதே

உந்தன் நேசர் இதயமோ இன்று உன்னைத் தேடுதே

கைகள் நீட்டும் எந்தனைபார் சாக்குபோக்கு                சொல்லிடாதே

உத்தமியே நீ எழுந்து வா! வா! வா!

உந்தன் நேசரோடு உறவாட வா! வா! வா!

 

இதயத்தை கவர்ந்த கொண்ட எந்தன் பிரியமே

உந்தன் நேசத்தின் உச்சிதங்கள் எனக்கு வேண்டுமே

திர்சாவின் சௌந்தரிமே அழகும் கெடியுமானவளே

உத்தமியே நீ எழுந்து வா! வா! வா!

உந்தன் நேசரோடு உறவாட  வா! வா! வா!